HAPPY BIRTHDAY அர்ச்சனா விஜே

HAPPY BIRTHDAY அர்ச்சனா விஜே 


02 Jul 1982 (Age 38) அர்ச்சனா சந்தொக் (அர்ச்சனா விஜே), தமிழ் சினிமாவின் பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஆவார். 

இவர் தமிழ் சினிமாவில் ஒரு தொகுப்பாளராக 2002-ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் என பல கோணங்களில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். 

அர்ச்சனா தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். 

👉பிறப்பு 1982 ஜூலை 2ல் ஒரு வடஇந்திய குடும்பத்தில் பிறந்த இவர், தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர் தமிழகத்தில் இடம் பெயந்துள்ளார்.

 👉திரையுலக தொடக்கம் அர்ச்சனா, தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர், பல முயற்சிகளை கடந்து 2002-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு "காமெடி டைம்" நிகழ்ச்சியில் நடிகர் சிட்டி பாபு உடன் இணைந்து ஒரு தொகுப்பாளினியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்தடுத்து இளமை புதுமை, கலக்கப்போவது யாரு?, என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ள இவர், தனது திருமணத்திற்கு பின்னர் சிறிது காலம் இடைவேளை விட்டு, மீண்டும் தனது திரைப்பயணத்தை தமிழ் சின்னத்திரையில் தொடங்கியுள்ளார்.

 தமிழ் சின்னத்திரை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக தற்போது பணியாற்றி அர்ச்சனா, தமிழ் சினிமா திரைப்படங்களிலும் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

👉பிக் பாஸ் 2020-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். 

👉தொகுப்பாளராக அர்ச்சனா பணியாற்றிய பிரபல நிகழ்ச்சிகள். 

✔️சன் தொலைக்காட்சி - காமெடி டைம். ✔️சன் தொலைக்காட்சி - இளமை புதுமை. ✔️ஸ்டார் விஜய் தொலைக்காட்சி - கலக்கப்போவது யாரு. 
✔️ஸ்டார் விஜய் தொலைக்காட்சி - நம்ம வீட்டு கல்யாணம். 
✔️புதுயுகம் தொலைக்காட்சி - செலிபிரிட்டி கிட்சேன்.
 ✔️ஜீ தமிழ் தொலைக்காட்சி - அதிர்ஷ்ட லட்சுமி. 
✔️ஜீ தமிழ் தொலைக்காட்சி - ச ரி க ம ப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 1,2.
 ✔️ஜீ தமிழ் தொலைக்காட்சி - ச ரி க ம ப சாம்பியன்ஸ் சீசன் 1,2 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.