கொடக்கவெல ஆடைத் தொழிற்சாலையில் 26 பேருக்கு கொரோனா.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

கொடக்கவெல ஆடைத் தொழிற்சாலையில் 26 பேருக்கு கொரோனா. 

கொடக்கவெல பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற் சாலை ஒன்றின் 30 பேருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 26 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதியாகியுள்ளது. 

பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலை கடந்த 26ஆம் திகதி மூடப்பட்டது. இதன்விளைவாக தொற்றாளர்களுடன் தொடர்புடைய 150 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 தொழிற்சாலை நிர்வாகம் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணித்ததால் இந்நிலைமை ஏற்பட்டதாக சுகாதாரத் துறை குற்றம் சாட்டுகிறது. “ஆடைத் தொழிற்சாலையின் அலட்சியம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. 45 தொற்றாளர்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளனர்” என கொடக்கவெல பொதுச்சுகாதார ஆய்வாளர் விபுல குமார தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.