தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் - சட்டைப் பையிலிருந்து கடிதம் மீட்பு அதிர்ச்சியடைந்த உறவினர்.

 [அகமட்லெப்பை ஜுனைதீன்]

 பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வென்ஞர் லோவலோரன்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய திருக்கேதீஸ்வரன் ( சங்கர்) என்பரவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இன்று காலை அவரது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூத்திலுள்ள பலாமரமொன்றிலேயே அவர் சடலமாக மீட்க்கட்டுள்ளார். பலாமரத்தில் சடலமொன்று தொங்குவதை கண்ட அயல் வீட்டார் வழங்கிய தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது அதிகாலை மூன்று மணியளவில் மாடு பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரின் சட்டை பையில் இருந்து எனது மரணத்தை நானாகவே தேடிக்கொண்டேன். 

எனது குடும்பத்தினரை யாரும் துன்புறுத்த வேண்டாம் எனது சுய சிந்தனையிலேயே இந்த கடிதத்தை எழுதுகிறேன் என்று எழுதிய கடிதமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடன் சுமையே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

 சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மரண விசாரணை அதிகாரி தனலக்ஷ்மி தலைமையில் இடம்பெறவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.