பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்...

அல்லைப்பிட்டியில் உள்ள விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ள நிலையில், அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

 தகவல் அறிந்து அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்துறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அதே விடுதியில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டார். 

மேலும் ,இந்நிலையில், சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பீசிஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.