ஆசிரியர்களுக்கான கொவிட் தடுப்பூசி இன்று முதல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 ஆசிரியர்களுக்கான கொவிட் தடுப்பூசி இன்று முதல். 


நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்படி ,நாளைய தினம் முதல் எதிர்வரும் இரு வார காலத்திற்குள் இந்த திட்டத்தை செயற்படுத்தி நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு கூறுகின்றது. நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 20 கல்வி சார் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

அதற்கமைய ,இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோருக்கும் கொவிட் தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படவுள்ளது. 

மேலும் ,குறித்த மூன்று நிறுவனங்களிலும் சுமார் 2000 பேர் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.