இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் -

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் - 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடையிலான நெருக்கடி நிறைவுக்கு வந்தது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் இடையிலான வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடு நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட வீரர்கள் நேற்று (06) மாலை நாடு திரும்பினர். இதனையடுத்து, கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திவதற்கு இன்று (07) காலை வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

 எனினும் நாடு திரும்பிய அனைத்து வீரர்களும் கொடுத்த கால எல்லைக்குள் எதிர்வரும் வருடத்திற்கான மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் தரப்படுத்தலின்போது, பின்பற்றப்பட்ட நடைமுறை வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்ட நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து நோக்கி பயணமானது. 

இதேவேளை, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான கால அவகாசம் ஒன்றை வழங்கி குறித்த காலப்பகுதிக்குள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வீரர்களை இந்தியாவுடனான போட்டியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பரிசீலிக்கப்படமாட்டாது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்திருந்தது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.