செவ்வாய்-வெள்ளிக் கிரகங்கள் அருகருகே தோன்றும் வானியல் அதிசயம் இன்று.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

செவ்வாய்-வெள்ளிக் கிரகங்கள் அருகருகே தோன்றும் வானியல் அதிசயம் இன்று. 


வான் மண்டலத்தில் அரிய நிகழ்வாக செவ்வாய், வெள்ளிக் கிரகங்கள் இன்று அருகருகே தோன்றுகின்றன. 

இந்த அற்புதக் காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம். வெறும் கண்களால் பார்த்து ரசித்து மகிழ்வதற்கு ஓர் அற்புத வானியல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. 

அதாவது, பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தை ஒட்டியே கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கோளுக்கும் இடைப்பட்ட தூரம் மாறுபடும். அவ்வாறு தத்தமது பாதைகளில் கோள்கள் பயணித்துக் கொண்டிருக்கும்போது பூமிக்கு அருகிலுள்ள கோள் தொலைவிலுள்ள கோளை முந்திச் செல்வது போல் இருக்கும். 

அந்த நேரத்தில் அந்த இரு கோள்களும் அருகருகே இருப்பது போல் தெரியும். இன்று மாலையில் வெள்ளிக் கோளும், மிகத் தொலைவில் இருக்கும் செவ்வாய்க் கோளும் அருகருகே இருப்பது போல் தெரியும். 

அப்போது அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் ஒரு பாகையை விடக் குறைவாக இருக்கும். இன்றைய தினம் மாலையில் சூரியன் மறைந்த பின் வீடுகளின் மொட்டை மாடியில் நின்றவாறு மேற்குத் திசையை உற்று நோக்கினால் அங்கு ஒளி பொருந்திய வெள்ளிக்கோள் தெரியும்.

 தொலைதூரத்தில் இருக்கும் செவ்வாய்க் கோள் ஒளி குறைவாக வெள்ளிக் கோளுக்கு அருகிலேயே இருப்பது போல் தெரியும். இந்த அற்புத காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.