அத்தியாவசிய சேவையினருக்காக நாளை முதல் பஸ், ரயில் சேவைகள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 அத்தியாவசிய சேவையினருக்காக நாளை முதல் பஸ், ரயில் சேவைகள்.

நாளை புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைக் கடமைகளில் ஈடுபடுவோருக்காக மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் நடத்தப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 பேருந்துகள் மற்றும் ரயில்களின் சேவைகளைப் பெற விரும்பும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்கள் தங்கள் கடமை அடையாள அட்டை அல்லது கடமை உறுதிப்படுத்தல் கடிதத்தை வைத்திருப்பது கட்டாயமாகும். 

அதே நேரம், அத்தியாவசிய தனிப்பட்ட விடயங்க ளுக்காக பல்வேறு நிறுவனங்களுக்குச் செல்ல விரும்புவோர் இந்த மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் ரயில்களைப் பயன்படுத்துவதன் மூலமும் தங்கள் தேவைகளை நிறைவு செய்ய முடியும். 

அவர்களும் தங்கள் தேவையை உறுதிப்படுத் தும்ஆவணத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். நேற்று கண்டியில் நடைபெற்ற தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.