கொரோனாவைரசினால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கதொடங்கியுள்ளன- அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

கொரோனாவைரசினால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கதொடங்கியுள்ளன- அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனாவைரசினால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கதொடங்கியுள்ளன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 நாட்டின் பல பாகங்களில் டெல்டாகொவிட் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்ற நிலையில் இது குறித்த கரிசனைகள் அலட்சியம் செய்யப்பட்டால் நாடு இந்தியா போன்ற ஒரு நிலைமையை எதிர்கொள்ளக்கூடும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரசாத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.

 கொரோனா வைரஸினால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலும் ஏனைய சில பகுதிகளிலும் பொதுமக்கள் முகக்கவசங்களை மாத்திரம் பயன்படுத்துகின்றனர் சமூகவிலக்கலை கடைப்பிடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

டெல்டா கொவிட் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதால் அரசாங்கமும் அதிகாரிகளும் சில தீர்மானங்களை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல டெல்டா கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் பல நாடுகள் நாட்டை மெதுவாகவே திறந்தன என அவர் தெரிவித்துள்ளார். 

அதிகாரிகள் தடுப்பூசிகளை மாத்திரம் நம்பியிருக்ககூடாதுஇபிசிஆர் சோதனைக்கான திறனை அதிகரிக்கவேண்டும்இஆபத்தான பகுதிகள் எவை என்பது குறித்த அறிவிப்பை அதிகாரிகள் வெளியிடவேண்டும் வைரஸ் வேகமாக பரவுகின்றது என்பதை மக்களிற்கு அறிவிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.