திருகோணமலையில் பயங்கர விபத்து

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

திருகோணமலையில் பயங்கர விபத்து

பாலையூற்று பாடசாலை ஆசிரியை பலி, கணவன், பிள்ளை ஆகியோர் படுகாயம். திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளதுடன் அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும்,7வயதான குழந்தை திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முச்சக்கர வண்டியில் வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வருகின்ற போது கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி முச்சக்கர வண்டியின்மீது மோதியதால் இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திருமதி.பாமதி ஞானவேல் (49) எனும் ஆசிரியையே [T/T/St Lady of Loudes R.C. Vidyalayam,பாலையூற்று] உயிரிழந்துள்ளார். 

மேலதிக விசாரணைகளை சேருவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பாக வாகனம் செலுத்த தெரியாத சாரதிகள் தயவுசெய்து வாகனத்தை தொடாதீர்கள் பல உயிர்கள் பாதுகாக்கப்படும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.