கொழும்பு கொரோனா தொற்றாளர்களில், 30 வீதமானோருக்கு டெல்டா.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கொழும்பு கொரோனா தொற்றாளர்களில், 30 வீதமானோருக்கு டெல்டா. 


நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் 30 வீதமானோர் டெல்டா தொற்றாளர்கள் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் Dr.ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். 

அதேவேளை, கொழும்பில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் 20 முதல் 30 வீதமானோர் டெல்டா தொற்றாளர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். 

கொழும்பு மாவட்டம் மாத்திரமன்றி, வடக்கு, தெற்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் டெல்டா பரவல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு, சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

டெல்டா கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடும் என அவர் சந்தேகம் வெளியிடுகின்றார். PCR பரிசோதனைகளின் மூலம் பெற்றுக்கொண்ட பெருமளவான மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையிலேயே, 68 டெல்டா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மேலும் பலர் இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.