தனிமைப்படுத்தல் காலத்தில் மட்டும் வீதி விபத்தால் 60 பேர் பலி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தனிமைப்படுத்தல் காலத்தில் மட்டும் வீதி விபத்தால் 60 பேர் பலி

இலங்கையில்
பதிவான முதல் கோவிட் அலைக்குப் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் கால் பகுதிக்கும் குறைவானவர்களே சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 72,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் 15,908 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,717 வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 13 வரை, வீதியில் காணப்படும் நெரிசலற்ற நிலைமையைத் தவறாகப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் மூலமாக 63 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்துகளில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.