மிளகாய் இறக்குமதியை நிறுத்த தீர்மானம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மிளகாய் இறக்குமதியை நிறுத்த தீர்மானம்.

அமைச்சர் மஹிந்தானந்த மிளகாய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே தெரிவித்தார். 

நாட்டிற்குத் தேவையான மிளகாயை உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டிற்குத் தேவையான மிளகாயை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

 மிளகாய் விவசாயத் திட்டத் தின் கீழ் நாவலப்பிட்டி கலபொட தோட்டத்தில் 100 ஏக்கர் மிளகாய் பயிரிடும் செயற்றிட்டம் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த தலைமையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

 இலங்கைக்கு ஆண்டு தோறும் தேவையான மிளகாய் 5,000 மெற்றிக் தொன் ஆகும். எனினும், நாட்டில் உற்பத்தி செய்யப் படும் மிளகாயின் அளவு 50 மெற்றிக் தொன் மட்டுமே. 

எனவே, மிளகாய் இறக்குமதி செய்வதற்காக ஆண்டு தோறும் அதிகளவு அந்நியச் செலாவணி விரயமாகிறது. இதனைத் தவிர்க்க, நாட்டிற்குத் தேவையான மிளகாயை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விவசாயத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். 

அதன்படி, 3,000 மெற்றிக் தொன் மிளகாயைப் பயிரிட விவசாயத் துறை திட்டமிட்டுள்ளது. 

இதற்கிடையில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்கு(ஜனவசம)ச் சொந்தமான விளைச்சல் இல்லாத கலபொட தோட்டத்தில் நூறு ஏக்கர் தோட்டப் பகுதியில் 100 தமிழ் இளைஞர்களுக்கு பகிர்ந்தளித்து மிளகாயைப் பயிரிட முன்மாதிரியான விவசாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தாக அவர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.