பெற்றோர் கைகளால் ஏந்தியவாறு பாடசாலை சென்ற மாணவி ; 09 ஏ பெற்று சாதனை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பெற்றோர் கைகளால் ஏந்தியவாறு பாடசாலை சென்ற மாணவி ; 09 ஏ பெற்று சாதனை.

 

மாத்தறை- டிக்வெல்ல பகுதியிலிருந்து மாணவி ஒருவர் தனது தலைவிதியைச் சவாலாக எடுத்துக்கொண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 A பெறுபேற்றுடன் சித்தி யடைந்துள்ளார்.

 பிறப்பிலிருந்து நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் பெற்றோர்களின் கைகளால் பாடசாலைக் குச் சுமந்து செல்லப்பட்ட தேவி ரன்சரா குலதுங்க ராஜபக்ஷ என்ற மாணவி 2020 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையில் 9 A பெறுபேற்றுடன் சித்தி யடைந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தரம் ஒன்றிலிருந்து ரத்மலை சதர்ம ராஜ மகா வித்தியாலயத்தில் கற்கும் தேவி ரன்சரா கடந்த 2014 இல் 177 மதிப்பெண்களுடன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றார். 

குறித்த மாணவி ஏனைய மாணவர்களை விட விஷேட கவனத்துக்குரியவர். ஏனெனில் அவள் பிறப்பிலிருந்து நரம்பியல் நோ யால் பாதிக்கப்பட்டுள்ளவையே இதற்குக் காரணம். தேவி ரன்சரா குலதுங்க ராஜபக்ஷ மாத்தறை பம்பரந்த சதர்ம ராஜ மகா வித்தியாலயத்தில் படிக்கிறார்.

 அவரது இயலாமை காரணமாக, பாடசாலை வகுப்பறையில் அவளுக்காக விசேட இருக்கை ஒதுக்கப்பட்டது. அவளது சிறப்புத் தேவைகளைக் கருத்திற்குக் கொண்டு அழகியல் கலைக்குப் பதிலாகப் பாடசாலையில் சிங்கள இலக்கியத்தைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 

ஆனால், தேவி தன் வாழ்வின் எந்த ஒரு நாளிலும் இயலாது என நினைக்கவில்லை. இலக்கை நோக்கிய அசைக்க முடியாத நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி அவளுக்கு வாழ்க்கையில் வெற்றியின் மைல்கல்லைக் கடக்கும் வாய்ப்பை வழங்கியது.

 தேவி ரன்சராவின் தந்தை மஹிந்த குலதுங்க ராஜபக்ஷ மாத்தறை வன இலாகா அலுவலகத்தில் கள அலுவலராகவும், அவரது தாயார் குசும்னி அபேகுணவர்தன ரத்மலை சதர்ம ராஜ மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் பணி புரிகின்றனர்.

 தேவி ரன்சராவின் இரண்டு இளைய சகோதரர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளனர். பிறப்பிலிருந்து முதுகெலும்புடன் தொடர்புடைய நரம்பியல் நோய் காரணமாகத் தேவி தனது வாழ்நாளின் பெரும் பகுதியை சிகிச்சைக்காக மருத்துவமனை களிலேயே பெற்றோருடன் கழித்துள்ளார்.

 சிகிச்சைக்காக அவள் எவ்வளவு நேரம் செலவிட்டாலும், தேவி தன் கற்றலுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார். தனது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத தேவிக்குப் பேனா ஒன்றைக் கூட கையாலேயே எடுத்து கொடுக்க வேண்டும் என்றும் அதை அவள் விரல்களுக்கு இடையில் வைத்திருப்பது மிகவும் கடினம் என்றும் தெரிய வந்துள்ளது.

 ஒவ்வொரு நாளும் பாடசாலைக்குச் செல்வது மற்றும் பல்வேறு தேவைகளுக்காக மற்ற இடங்களுக்குச் செல்வது போன்ற சகல நடவடிக்கைகளையும் தாய் மற்றும் தந்தையின் கைகளால் சுமந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.

 பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் தேவிக்கு உதவி செய்கின்றனர். அதுபோல வாழ்க்கையை வெல்ல முயற்சிக்கும் தங்கள் ஒரே மகளைக் குணப்படுத்துவதே பெற்றோரின் பெரும் நம்பிக்கை. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.