வெளிநாட்டு வருகையாளர்களுக்கான கட்டாய பிசிஆர் சோதனையை திடீரென நிறுத்தியமை தொடர்பில் கண்டனம் - மருத்துவ நிபுணர்கள் சங்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வெளிநாட்டு வருகையாளர்களுக்கான கட்டாய பிசிஆர் சோதனையை திடீரென நிறுத்தியமை தொடர்பில் கண்டனம் - மருத்துவ நிபுணர்கள் சங்கம்.

வெளிநாட்டு வருகையாளர்களுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் கட்டாய பிசிஆர் சோதனையை திடீரென நிறுத்தியமையை மருத்துவ நிபுணர்கள் சங்கம் கண்டித்துள்ளது. 

அரசாங்கம் வெளியிட்ட புதிய வழிகாட்டல்களுக்கு சங்கம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், இது தொடர்பில் அறிக்கையை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

முற்றிலும் தடுப்பூசி போடப்பட்ட அட்டையை நம்பி மற்றும் வருகைக்கு முன் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட பிசிஆர் அறிக்கையை நம்பி சுற்றுலா பயணிகள் வருகையின் போது பிசிஆர் சோதனைகள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதித்தமை தொடர்பில் தங்கள் எதிர்ப்பையும் அச்சங்கம் வெளிப்படுத்தியுள்ளது. 

இது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமிருந்தும் தியாகங்கள் மூலம் பெறப்பட்ட நோய் கட்டுப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும். 

ஆபத்தான வைரஸ் வகைகளை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

 இலங்கையில் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளிலும் உள்ள போலியான தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் பிசிஆர் அறிக்கைகள் தொடர்பிலும் அவர்கள் நினைவு கூர்ந்தனர். 

எனவே, நிபுணர்களின் பங்கேற்புடன் முடிவை மறுபரிசீலனை செய்து, நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து உரிய முடிவுகளை எடுக்குமாறும் அச்சங்கம் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.