அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து பொலிஸாரை விடுவிப்பதற்கு புதிய சட்டமூலம் - சரத்வீரசேகர

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து பொலிஸாரை விடுவிப்பதற்கு புதிய சட்டமூலம் - சரத்வீரசேகர

காவல்துறையினருக்கு எதிராக சுமத்தப்பட்ட அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது. 

குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை ஆறுமாதத்திற்குள் பூர்த்தி செய்ய முடியாவிட்டால்- காவல்துறையினரை அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்ய அனுமதிக்கும் சட்டமூலம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார். பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வதை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனும் காவல்துறையினரை காப்பாற்றும் நோக்கத்துடனும் புதிய சட்டமூலத்தை கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

பொலிஸார் தங்கள் கடமைகளை உரியைவிதத்தில் நேர்மையாக செய்தவேளைகளில் பொதுமக்கள் அவர்களிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால் 35 பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு பதவி உயர்வு வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதன்காரணமாக பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை ஆறுமாதங்களிற்குள் பூர்த்தி செய்யமுடியாவிட்டால் அவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்வதற்கான சட்டமூலம் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.