15 தொடக்கம் 24 வயதுடையவர்களுக்கே H.I.V தொற்று அதிகரித்துள்ளது...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

15 தொடக்கம் 24 வயதுடையவர்களுக்கே H.I.V தொற்று அதிகரித்துள்ளது...

இளைஞர்களுக்கு பாலியல் கல்வியை கொடுக்க வேண்டியது அவசியம். இளைஞர்கள் மத்தியில் பாலியல் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டியது அவசியமென எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அறிவித்துள்ளது.

 நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியர் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அறிவித்துள்ளது. 

இதன் காரணமாக இளைஞர்கள் மத்தியில் பாலியல் கல்வி தொடர்பிலான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டியது அவசியமென அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரசாங்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளாா்.

 இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் இதுவரையில் 3,700 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களில் 60 சதவீதமானவர்களே தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 

அவ்வாறானால் 40 வீதமான நோயாளர்கள் சிகிச்சை பெறாமல் இருக்கிறாா்கள். எங்களால் சேகரிக்கப்பட்டுள்ள அறிக்கைகளுக்கமைய 15 தொடக்கம் 24 வயதுக்கிடைப்பட்டவர்களே எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளது.

 அதனால், இளைஞர்களுக்கு பாலியல் கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடுகளினால் 90 வீதமானோருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகின்றது. 

இந்த தொற்று ஏற்பட்டு 12 வருடங்கள் கடக்கும்போது எயிட்ஸ் நோய் நிலைமை உருவாகின்றது. இருந்தபோதிலும், சரியான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதன் மூலம் எய்ட்ஸ் நோய் நிலைமைக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ள கூடியதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளாா். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.