அதிக விலைக்குப் பொருட்களை விற்பவர்களைத் தேடி வேட்டை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
அதிக விலைக்குப் பொருட்களை விற்பவர்களைத் தேடி வேட்டை.

சீமெந்து உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்களைத் தேடி நுகர்வோர் அதிகார சபை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இதன்படி ,மாத்தளை மாவட்டத்தில் சீமெந்து மற்றும் இரசாயன உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபையின் மாத்தளை மாவட்டத் தலைவர் ரேணுகா குமார தெரிவித்தார்.

 தற்போது நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, பல பகுதிகளில் சீமெந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 இதற்கமைய ,ஒரு மூடை சீமெந்து 1350 ரூபாவுக்கும் அதிகமான விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர். 

சில வியாபாரிகள் சீமெந்து மூடை ஒன்றை 1500 முதல் 1600 ரூபா வரையான விலையில் விற்பனை செய்வதாகவும் இந்த விடயம் தொடர்பில் தமது அதிகாரம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ரேணுகா குமார தெரிவித்தார். அதேவேளை , ஒரு சிறு வணிகர் குழு மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யாது வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் தகவல் கிடைத்துள்ளதா அவர் மேலும் குறிப்பிட்டார்.

 மேலும் ,மாத்தளை மாவட்டத்தில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடி நுகர்வோர் அதிகார சபைக்குத் தெரிவிக்கும் படி பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/t91HXgQ
https://ift.tt/qcewlba

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.