க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை என தகவல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை என தகவல்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் நிலவி வரும் அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு முடியாத நிலைமை உரவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரண தரப் பரீட்சையை கோவிட் காரணமாக மே மாதம் 23ம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இந்த பரீட்சையில் தோற்ற உள்ளனர். அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் போதும் பரீட்சைகள் திணைக்களத்திடம் போதியளவு கடதாசிகள் கையிருப்பில் இருக்கவில்லை எனவும், அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் கடதாசி பெற்றுக்கொண்டே பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடப்பட்டதாக பரீட்சை திணைக்கள அதிகாரியொருவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, கடதாசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/ZylbLW6 https://ift.tt/XAT7UjN #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/RCkgLY6
https://ift.tt/oSw2isK

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.