40,000 குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோரைத் தேடும் அரசாங்கம்!

நாட்டில் போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளின் போசாக்கு தேவையை பெற்றோர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் , அந்த குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதுவரை 21,000 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

அதன்படி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள 40,000 குழந்தைகளை இலக்காகக் கொண்டு இந்த வளர்ப்பு பெற்றோர் தேடல் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான திட்டத்திற்காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், இந்திய நிறுவனம் ஒன்றும் இலங்கையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றும் இதற்காக ஒரு பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.