LED விளக்குகள் சர்க்கரை நோயை உண்டாக்குகிறதா? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

 

இன்றைய காலத்தில் பலரும் அவதிப்படும் ஒரு நோய்களில் ஒன்று தான் சர்க்கரை நோய். இது தற்போது பல காரணங்களால் வரத் தொடங்கியுள்ளன.

தற்போது ஆய்வின் படி சர்க்கரை நோய் வருவதற்கு LED விளக்குகள் கூட ஒரு காரணமாக இருக்கின்றது என்று கருதப்படுகின்றது.

நாம் கடந்துபோகும் சாலைகளில் நியான் லைட்டுகள் கொண்ட விளம்பரப் பலகைகள், மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் லேசர் ஒளிக்கற்றைகள், கட்டிடங்களில் மின்னும் எல்இடி விளக்குகள் போன்றவை நீரிழிவு நோயின் அபாயத்தை பன்மடங்கு அதிகரிப்பதாக ஒரு இந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் இந்த ஆய்வு என்ன கூறுகின்றது என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.  

📌 ஆய்வு கூறுவது என்ன? 

 ஆராய்ச்சியின் படி, LED விளக்குகள் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளை எளிதாக பாதிக்கிறது. இதன் காரணமாக நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது. 

LED விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் நபரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன. இதனால் தூக்கம் வரவும், காலையில் விழித்துக்கொள்ள உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆற்றல் வித்தியாசமாக செயல்படுகின்றன.

இதன் காரணமாக சர்க்காடியன் ரிதம் மோசமடைகிறது. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது. LED ஒளியால், குளுக்கோஸின் வளர்சிதை மாற்றம் குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

📌 யாருக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம்?

 அலுவலகம், மால் போன்ற இடங்களில் பிராசிக்கும் அழகுக்காக சற்று கூடுதலாகவே இருக்கும். இதுபோன்ற சூழலில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

📌 எப்படி சர்க்ரை நோய்யை ஏற்படுத்துகின்றது? 

இரவில் நாம் பிரகாசமான வெளிச்சத்தில் இருக்கும்போது, ​​கார்டிசோல் ஹார்மோனின் ஆதிக்கம் செலுத்தும் போது மெலடோனின் ஹார்மோன் அடக்கப்பட்டு, அதிக சர்க்கரை உருவாவதை ஊக்குவிக்கிறது.

எனவே முடிந்தவரை LED விளக்குகளில் இருந்து சற்று விலகியே இருங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.