கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு விதிக்கப்பட்டுள்ள போட்டி தடை.

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் போட்டியொன்றின்போது தன்னுடன் புகைப்படம் எடுக்க முயன்ற உதைபந்தாட்ட ரசிகரின் கையடக்கத் தொலைபேசியை தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ரொனால்டோ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் அவருக்கு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இரண்டு உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரொனால்டோவுக்கு எதிரான தற்காலிக தடை அவர் பங்கேற்கும் உள்நாட்டுப் போட்டிகளுக்குப் பொருந்தும் என்றும் இந்த தடை பீஃபா உலகக் கிண்ணத் தொடரில் அவர் பங்கேற்பதற்கு எந்தத் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரதிநிதித்துவப்படுத்தும் போர்த்துக்கல் அணிக்கும் கானா அணிக்கும் இடையிலான போட்டியொன்று இலங்கை நேரப்படி இன்று (24.11.2022) இரவு 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.