நீராடச்சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.

காலி - ரத்கம கடலில் நீராடச் சென்ற நபரொருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 26 வயதுடைய ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ரத்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹஜன விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கடலில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.