அரச ஊழியர்களுக்கு கிடைக்க போகும் வாய்ப்பு.

போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், அரச ஊழியர்களுக்கு தமது வீடுகளுக்கு அருகில் கடமையாற்ற கூடிய அலுவலகங்களுக்கு இடமாற்றங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

இதனடிப்படையில், அரச ஊழியர்களுக்கு தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு இடமாற்றத்தை வழங்கும் முறை உருவாக்கப்பட உள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.

கடனுக்கான வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளதால், கடனை செலுத்த முடியாமலும் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், அதிகளவான பணத்தை செலவிட்டு பேருந்துகளில் கடமைக்கு வந்து சென்று வாழ்க்கை கொண்டு நடத்த முடியாத சிக்கலை அரச ஊழியர்கள் எதிர்நோக்கி இருப்பதக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக இலங்கை மத்திய வங்கி உட்பட அரச நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.அரச ஊழியர்களுக்கு வீட்டுக்கு அருகில் உள்ள அரச அலுவலகத்திற்கு இடமாற்றத்தை வழங்கும் வேலைத்திட்டம் உரிய காலத்திற்குள் உருவாக்கப்படும்.

இதனை உருவாக்கும் விதம் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் சமரதுங்கவுடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியதாகவும் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.