மேலும் குறையும் வெங்காயத்தின் விலை.

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதாவது விசேட பண்ட வரி வீதத்தை குறைக்க உணவு கொள்கை குழு பரிந்துரைத்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டில் வெங்காயத்திற்கான தேவை வருடத்திற்கு சுமார் 300,000 மெட்ரிக் டன் ஆகும். இதில் இறக்குமதிகள் மூலம் 86% பூர்த்தி செய்யப்படுகிறது.

வெங்காய தேவையில் 14 சதவீதமானவற்றை பூர்த்திசெய்ய உள்நாட்டு உற்பத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 290 – 390 ரூபாவாகவும் கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை 340 – 400 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.