கல்வியமைச்சின் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரணத் தரப்பரீட்சை இடம்பெறும் காலப்பகுதி தொடர்பில் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்.

அதில், குறித்த பரீட்சைகள் அடுத்த வருடம் (2023) ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டுக்கான சாதாரணத் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன.

இந்தமுறை சாதாராணத் தரப் பெறுபேறுகளின் படி, 74 சதவீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், சாதாரணத் தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.