தந்தையை துரத்திச் சென்று மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த மகன்.

பதுளை – வெவஸ்வத்த பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது சிறிய தந்தையை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார்.

சந்தேக நபர் தனது தந்தையை தாக்குவதற்காக கையில் இருந்த பொல்லுடன் துரத்திச் சென்றுள்ளார்.

இதன்போது தந்தை இருந்த அறையின் கதவை சந்தேகநபர் உடைத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த 60 வயதுடைய நபர் பதுளை வெவஸ்வத்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையைச் செய்த 34 வயதுடைய சந்தேக நபர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஊமையன் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் பதுளை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவரின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் கொலை செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணை அதிகாரியின் விசாரணை இன்று (நவம்பர் 27) மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.