Whats App-ன் அசத்தல் அப்டேட் – இனி வீடியோ ஸ்டேட்டஸ் ரொம்ப ஈஸி!

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் தினதோறும் புதிய அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டின் படி இனி வாட்ஸ் அப் வீடியோ ஸ்டேட்டஸை எளிதாக வைக்கலாம். அது எப்படி என்பது குறித்த விவரத்தை இப்பதிவில் காண்போம்.

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் செயலி மூலம் மக்கள் எண்ணற்ற வேலைகளை செய்து வருகின்றனர். 

ஆரம்பத்தில் சாதாரண மெசேஜர் செயலியாக மட்டும் இருந்து வந்த வாட்ஸ் அப் செயலி தற்போது வணிகத்திற்கும் பயன்பட்டு வருகிறது. 

அந்த அளவிற்கு வாட்ஸ் அப்பில் அம்சங்கள் அதிகரித்து விட்டது. அதாவது முதலில் 256 பேர் மட்டுமே குரூப்பில் சேர முடியும் என்ற எண்ணிக்கை வரம்பு இருந்தது.


பின்னர் இந்த எண்ணிக்கை 512 ஆக உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது வாட்ஸ் அப் குழுவில் 1,024 நபர்கள் வரை இணையும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த அப்டேடுகளுக்கு மத்தியில் மெட்டா பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் டைமர் ஆப்ஷன், once view போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வரிசையில் தற்போது வாட்ஸ் அப்பில் புதிய வீடியோ பதிவு முறை அமலாக உள்ளது. 

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் போது நீண்ட நேர வீடியோ எடுப்பது பயனர்களுக்கு சிரமமாக இருந்து வந்த நிலையில் இதன் மேம்படுத்த பட்ட அப்டேட் வரவுள்ளது. 

அது என்னவெனில் வாட்ஸ் அப் வீடியோ பதிவில் ஷட்டர் பட்டன் என்ற புதிய ஆப்சன் காட்டப்படும். அதனை கிளிக் செய்து எளிதாக இனி வீடியோ எடுக்கலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.