மேலும் 05 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

இன்று 14-12-2022 ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

அதன் அடிப்படையில்

👉கோதுவை மா கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 250 ரூபாவாகும்.

👉ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும்

👉டின் மீனின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்  இதன் புதிய விலை 490 ரூபாயாகும்.

👉ஒரு கிலோ வௌ்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.

👉ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.

இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அடுத்து வரும் வாரத்தில் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.