ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டன் உணவு வீணடிப்பு! ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

உலகில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டன் உணவை வீணடிக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலகளவில் உணவு உற்பத்தி செய்யும் அளவையும் உலக மக்கள் உட்கொள்ளும் அளவையும் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) குழு உணவுக் கழிவு குறியீட்டு அறிக்கை தயாரித்து வெளியிட்டது.

இந்த அறிக்கையின் படி உலகில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உண்ணாமல் வீணடிக்கப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகளாவிய உணவு விரயம் என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேவேளை, உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் 8 - 10 சதவீதம் உட்கொள்ளப்படாத உணவுகளால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

UNEP இன் உணவுக் கழிவு அறிக்கையானது உணவுக் கழிவுகளை அளவிடுவதற்கும், நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 12.3 இல் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் ஒரு பொதுவான வழிமுறையை வழங்குகிறது.

காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் பல்லுயிர் இழப்பு மற்றும் மாசு மற்றும் கழிவு போன்ற நெருக்கடியை சமாளிக்க உணவு முறை சீர்திருத்தம் குறிப்பிடத்தக்கது என்று UNEP அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், உற்பத்தி மற்றும் உட்கொள்ளும் உணவுக்கு இடையேயான இடைவெளி அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் வீடுகளில் உணவை பெரிதும் வீணடிப்பதால் தான் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

மக்கள் அனைவரும் தங்கள் சாப்பிடும்போது விட்டுச்செல்லும் சிறு சிறு அளவிலான உணவு விரையம் தான் மொத்தத்தில் அதிகமான உணவு கழிவாக மாறுகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.