இலங்கையின் பிரதேசமொன்றில் 15 வயதான மாணவி உட்பட 11 பேர் தற்கொலை!

 

ஹோமாகம மரண விசாரணை அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 50 நாட்களில் 15 வயது பாடசாலை மாணவி உட்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான் சிந்தக உதயகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதேசமொன்றில் 15 வயதான மாணவி உட்பட 11 பேர் தற்கொலை! | 11 People Suicide

15-65 வயதுக்கு இடைப்பட்டவர்கள்

பனாகொட, ஹபரகட, நியதகல, பிடிபன, ஹிரிபிட்டிய, மீகொட, ஹங்வெல்ல மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் 15-65 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்களில் ஏழு பேர் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாவர்கள் எனவும் அவர் கூறினார்.

உயிரிழந்தவர்களில் பல மரணங்கள் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தினால் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், காதல் உறவினால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரிய வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 15 வயது பாடசாலை மாணவியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், தந்தை வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.