1,000 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து சாரதியின் சாதுர்யத்தால் தப்பிய 40 பயணிகள்!

பயணிகல் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 1,000 அடி பள்ளத்தில் வீழ்ந்து கொண்டிருந்தபோது சாரதியின் சாதுரியத்தால் பாரிய விபத்து சம்பவம் ஒன்று   தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (03) காலை தும்பிலியாவ பிரதேசத்தில்   இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

திடீர் தொழில்நுட்பக் கோளாறு

ஸ்பிரிங்வெலி பகுதியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு இபுல்கொட தும்பிலியாவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 40 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பஸ் சாரதியின் சாதுரியத்தால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்ட அதேவேளை சம்பவத்தில் பல வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.