சாரதியின் தூக்க கலக்கத்தால் 25 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

ஹட்டன் - நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நுகேகொடையில் இருந்த வெலிமடைக்கு செல்வதற்காக வந்த முச்சக்கரவண்டி இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இவ்விபத்துக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துள்ள நிலையில் அதிஸ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கும் ஹட்டன் காவல்துறையினர், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.

எனினும் முச்சக்கர வண்டி கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.