பாடசாலை உபகரணங்கள் விலை அதிகரிப்பு.

பாடசாலை உபகரணங்கள் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதனால் அடுத்த ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

10 ரூபாய்க்கு விற்கப்பட்ட பென்சில் 40 ரூபாய் என்றும், பேனா 30 ரூபாய் என்றும், 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட பயிற்சிப் புத்தகம் 120 ரூபாய் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இதையடுத்து ரேசர் (அழிப்பான்) ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படித்தியுள்ளது.

மேலும் 1200 ரூபாவாக இருந்த பாடசாலை காலணிகள் மற்றும் பைகளின் விலை 3000 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், தண்ணீர் போத்தல்கள் என அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதுதவிர, வண்ண பென்சில்கள், பெஸ்டல்கள், பென்சில் பொக்ஸ்கள் போன்ற அனைத்து பொருட்களின் விலைகளும் பெருமளவு அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.