இ.போ.ச பஸ்கள் இரண்டு மோதி விபத்து-15 பேர் வைத்தியசாலையில்!

𝑰𝑻𝑴 ✍️ வலப்பனை கீர்த்தி பண்டாரபுர வழிவூடான கண்டி-பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கு அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கியும்,பண்டாரவளையிலிருந்து அதே வழியில் கண்டியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மோதி  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ விபத்து சம்பவித்த போது இவ்விரு பஸ்களிலும் பயணித்த பயணிகளில் 15 பேர் விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலைக்கும்,ஒரு சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்ப்பட்டு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ வேககட்டுப்பாட்டை மீறிய இவ்விரு பஸ்களும் மோதிக்கொண்டதாக தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.