புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!

𝑰𝑻𝑴 ✍️ 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(18.12.2022) நடைபெற்றது.

𝑰𝑻𝑴 ✍️ 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளன.

𝑰𝑻𝑴 ✍️ இந்நிலையில் இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ கல்கமுவ கல்விப் பிரிவுக்குட்பட்ட எஹெதுவெவ பண்டாரநாயக்க தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழுவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக பெற்றோர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ குறித்த பாடசாலையின் ஆசிரியரினால், வினாத்தாள் விநியோகத்தின் போது ஏற்பட்ட பிரச்சினையினால் தமது பிள்ளைகள் அநீதிக்கு இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ சம்பவம் தொடர்பில் நாளை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.