குருநாகலையில் கோர விபத்து - 3 பெண்கள் பலி!

𝑰𝑻𝑴 ✍️ குருநாகல் - நாரம்மல வீதியில் பெந்திகமுவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ இந்த விபத்து நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

𝑰𝑻𝑴 ✍️ நாரம்மல நோக்கிச் சென்ற வேன் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மதகு ஒன்றில் மோதி, வீதியில் வழுக்கி முன்னோக்கிச் சென்று, அருகில் இருந்த பேருந்து தரப்பிடத்தில் காத்திருந்த மூன்று பெண்கள் மீது மோதியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ விபத்தில் மூன்று பெண்கள் படுகாயமடைந்து நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

𝑰𝑻𝑴 ✍️ குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பெந்திகமுவ, நாரம்மல பிரதேசத்தை சேர்ந்த 56, 59 மற்றும் 61 வயதுடைய பெண்களாவர்.

𝑰𝑻𝑴 ✍️ இரண்டு பெண்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய பெண்ணின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ வேன் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.