சடலமாக மீட்கப்பட்ட இருபது வயது யுவதி - விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்.

𝑰𝑻𝑴 ✍️ அத்தனகல்ல - தன்விலான பிரதேசத்தில் , பின்னகொல்ல பகுதியில் தனிமையில் இருந்த இருபது வயது யுவதியொருவரின் சடலமொன்று 18 ஆம் திகதி இரவு அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து வெயாங்கொடை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் வத்துபிட்டிய ரணவிருகம பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ சம்பவம் தொடர்பில் நேற்று காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்ததையடுத்து, அத்தனகல்ல பதில் நீதவான் பின்னகொல்லவில் உள்ள முட்புதரில் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ குறித்த யுவதி தங்கியிருந்த வயங்கொடை தன்விலான பகுதிலுள்ள வீட்டிற்குச் சென்று நீதவான் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், யுவதி தனியொரு அறையில் தனிமையில் தங்கியிருப்பதும், காதலனால் மூன்று வேளை உணவும் எடுத்து வரப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இந்நிலையில், மனைவியை விட்டு பிரிந்த திருமணமான இளைஞனுடன் யுவதி காதல் தொடர்பிலிருந்த நிலையில் யுவதியின் காதலன் அந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இளைஞனை அண்மையில் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இதன் காரணமாக யுவதி உயிரிழந்துள்ளதாககாவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ யுவதியின் காதலன் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட நிலையில் பதிலளிக்காமல் யுவதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இதனை தொடர்ந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போது பின்னகொல்ல பகுதியில் உந்துருளி எரிபொருள் தீர்ந்து போனமையினால் சம்பவம் குறித்து அவரது தாயாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ தாயின் அறிவுறுத்தலின் படி சடலத்தை அந்த இடத்தில் விட்டுவிட்டு காதலன் வயங்கொடை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் நீதவான் விசாரணையில் தெரியவந்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இதன்போது மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நீதவான் விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வட்டுப்பிட்டிவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பதில் நீதவான் வயங்கொடை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.