ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 5 இலட்சம் யென் மானியம்.

 

Japan: ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. 

இறப்புகள் அதிகம் இருப்பதால், அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. 

கடந்த ஆண்டு அந்நாட்டில் 8,11,604 பிறப்புகளும் 14,39,809 இறப்புகளும் பதிவாகின. 

இந்நிலையில், நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்குகிறது. 

அதன் ஒரு பகுதியாக, குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 4,20,000 யென் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்த மானியத்தை 80,000 யென் அதிகரித்து 5 இலட்சம் யென்னாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சர் Katsunobu Kato தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.