4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த அயலவர் கைது.

திருகோணமலை – கந்தளாய் – அக்போபுர பகுதியில் 4 வயது குழந்தையொன்றை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவரே, இந்த குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.