அமெரிக்காவை தாக்கியுள்ள வெடிகுண்டு சூறாவளி இதுவரை 60 பேர் பலி.

அமெரிக்காவை தாக்கியுள்ள வெடிகுண்டு சூறாவளி (Bomb Cyclone)என்று அழைக்கப்படும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இடைவிடாது பனி பொழிவதால், வீதிகளில் பல அடி உயரத்திற்கு பனி குவிந்துள்ளது. 

அவற்றை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், தொடர்ந்தும் பனிப்பொழிவு ஏற்படுவதால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். 

குளிர், மின்தடை, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றை மக்கள் சந்தித்து வருகிறார்கள். 

இந்த பனிப்புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. 

சிலர் காருக்குள்ளேயே உறைந்து உயிரிழந்துள்ளனர். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியூயார்க்கில் மீட்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.