கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தில் மாற்றம்.

மணல், கல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கான புதிய அனுமத்திர முறையொன்று எதிர்வரும் 02ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் மணல், கல் மற்றும் மண் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களில் வாகன இலக்கம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டிய வீதி என்பன உள்ளடக்கப்படாமையால் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பை அடுத்து, எதிர்வரும் 02ஆம் திகதி முதல் அனைத்து போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களிலும் வாகன இலக்கம், போக்குவரத்து பாதை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

NEWS1ST

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.