பதுளையை தாக்கியது மினி சூறாவளி.

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு வீசிய மினி சூறாவளியினால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

கடும் காற்றுடனான வானிலையினால் பல குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து தடைகளும் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பசறை – நமுனுகுல பிரதான வீதி,

பிபிலகம – பசறை வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

படல்கும்புர பிரதேச கமேவெல நான்காம் கடை பகுதியில் லயன்குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

லுணுகல – ஜனதாபுர பகுதியில் மின்கம்பம் உடைந்து வீதியில் விழுந்தமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பசறை – லுணுகல பிரதேசங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

செந்தில் தொண்டமான் விடுத்த பணிப்புரை

பசறை – லுணுகலை உட்பட்ட தோட்டப் பகுதிகளில் நேற்றிரவு முதல் திடீரென வீசிவரும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குமாறு மாவட்ட அதிபருக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மாற்று இடங்களில் தங்கவைப்பதுடன் அவர்களுக்கான உலர் உணவுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு,சேதமடைந்த வீடுகளை சீர்திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும்

செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன் இப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பாடசாலையை சீர்திருத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண செயலாளருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶






No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.