வீட்டின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு.

உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடபத்தனை கிராமத்தில் வீடு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (08) அதிகாலை 4.15 மணியளவில் மரம் ஒன்றின் கிளைகள் வீழ்ந்துள்ள நிலையில் அவ்வீட்டின் ஒரு பகுதி உடைந்து வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததாக உடப்புஸ்சலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 55 வயதுடைய வீ.கே.ஆரியபால என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் நால்வர் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அறிந்த கிராமவாசிகள் விரைந்து வீட்டில் சிக்கியிறுந்தவர்களை மீட்டுள்ள நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த நபர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆ.ரமேஸ்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.