கொய்யா இலையால் இந்த நோயை தீர்க்கலாமா!

ஆப்பிளில் உள்ள சத்துக்களை காட்டிலும் அதிக ஊட்டச்சத்து கொண்ட பழம் கொய்யா. பொதுவாக   மக்கள் குளிர் காலத்தில் அதிகளவு கொய்யா பழம் சாப்பிடுவார்கள்.

ஆனால் இந்த சுவையான பழம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உதவும் என்று கூறப்படுகிறது.

கணையம் உடலில் இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்வதைக் குறைக்கும் போது அல்லது நிறுத்தினால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

இதன் காரணமாக அடிக்கடி தாகம், காயங்கள் தாமதமாக குணமடைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பார்வை குறைதல் போன்ற பிரச்சனை தொடங்குகிறது.

சர்க்கரை நோயை ஒழிக்க இதுவரை பயனுள்ள சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதை கட்டுக்குள் வைத்திருக்க சில இயற்கை வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் கொய்யா இலை.

இலையின் மருத்துவ குணங்கள் 

இதன் பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் மருத்துவப் பயன் கொண்டது. நம்முடைய சித்த மருத்துவத்தில் கொய்யா இலையும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

கொய்யா இலையில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை இதய திசுக்கள் ஃப்ரீ ராடிக்கல் பாதிப்பு காரணமாக சிதைவுறுவதைத் தடுக்கின்றன.

அதேபோல் தொடர்ந்து கொய்யா இலை நீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவு குறைந்து, நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கிறது.

கொய்யா இலைகளை கஷாயம் செய்து குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

கொய்யா இலைகள் (நீரிழிவுக்கான கொய்யா இலைகள்) மிகப்பெரிய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவும் இதன் இலைகளின் சாற்றில் ஹைப்பர் கிளைசெமிக் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.

தேநீராக பயன்படுத்தும் நாடுகள்.

ஜப்பான், சீனா, கொரியா, தைவான் உள்ளிட்ட பல நாடுகளில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீர் பயன்படுத்தப்படுவதற்கு இதுவே காரணம்.

கொய்யா இலையை தேநீர் குடிப்பதால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.⏩

👉இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிக சிறந்தது

👉இதய நோய் அபாயத்தை குறைக்கும்

👉உடல் எடையை குறைக்க உதவும்

👉ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்

👉வாய் புண்களுக்கு சிறந்த நிவாரணம்

👉சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதம்  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.