குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்.

தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் கம்பஹா லொலுவாகொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மூவரும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் எட்டு வயது மகளும் ஐந்து வயது மகனும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக் குழந்தைகளின் தந்தை ஓடுபாசி தொழிலாளி என்பதுடன் குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.