மகனுக்கு எதிராக தாய் ஒருவரின் விசித்திர முறைப்பாடு.

தம்புள்ளையில் 3ஆம் வகுப்பில் படிக்கும் தனது மகன் தன்னை துன்புறுத்துவதாக தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவின் 119 இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்துள்ளார்.

தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர், முறைப்பாடு கிடைக்கப்பெற்ற பதினைந்து கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தில் அமைந்துள்ள வீட்டிற்கு நள்ளிரவில் சென்றுள்ளனர்.

பொலிஸார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹோர்ன் அடித்ததையடுத்து, சில நிமிடங்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், ​​ஒரு பெண் கதவை திறந்து வெளியே வந்துள்ளார்.

வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம், குழந்தையால் பெற்றோருக்கு தொந்தரவு கொடுத்த சம்பவம் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“நீங்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளீர்கள். பிள்ளை தூங்கிவிட்டது. நான் ஏழரை மணியளவிலேயே அழைப்பேற்படுத்தினேன் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசித்திரமான அறிக்கை குறித்து தாயாரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரித்தனர்.

தனது மகன் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், இரவு சீக்கிரம் தூங்கச் செல்லுமாறு கூறியும், தூங்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும், மற்ற பிள்ளைகளை தூங்க விடாமல் கேலி செய்வதாகவும், தொந்தரவு செய்வதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் இந்த வீட்டிற்கு சென்றபோது, ​​நள்ளிரவை நெருங்கிவிட்டதால், பிள்ளைகள் இரவு எத்தனை மணிக்கு தூங்க ஒதுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் கேட்டுள்ளனர்.

மாலை சுமார் 6:30 மணிக்கு பிள்ளைகள் தூங்க வேண்டும் என தாய் கூறியுள்ளார். முன்னதாக உணவு சமைத்து அவர்களை தூங்க வைப்பேன்.

3ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மகன் உறங்காதால், அவரை தூங்க வைக்க பொலிஸ் அதிகாரிகளை அழைத்து பயமுறுத்துவதற்காக இந்த தொலைபேசி அழைப்பை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சிறு சிறு சம்பவங்களில் பொலிஸாரின் நேரமும் பொதுமக்களின் பணமும் வீண் விரயமாகிறது என தாயாரை கடுமையாக எச்சரித்த பொலிஸார், இனிமேல் இவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.