இலங்கையிலிருந்து வேலைக்காக வெளிநாடு செல்வதில் வரப்போகும் கட்டுப்பாடு.

𝑰𝑻𝑴 ✍️ இலங்கையிலிருந்து வேலைக்காக பெண்கள் வெளிநாடு செல்வதில் கட்டுப்பாடு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ அதன்படி இலங்கையிலிருந்து பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ அதேவேளை சர்வதேச தரத்திலான பயிற்சி பெற்றவர்களை மட்டுமே வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இந்த நிலையில் இலங்கை பெண்களை வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதற்கான உயர்தர பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ மேலும், அடுத்த வருட ஆரம்பத்தில் இந்த பயிற்சி ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.