உளநலம் பாதிக்கப்பட்ட மகளை துஷ்பிரயோகப்படுத்திய பெரிய தந்தை!

அநுராதபுரம், கல்னேவ – ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அச்சிறுமியின் பெரிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர்கள், ஹுரிகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, குறித்த பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், குற்றப் விசாரணைப் பிரிவினர் மற்றும் விசேட பணியக அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, 60 வயதான சந்தேக நபர் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்ட நாட்களாக சிறுமியின் வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியின் பெற்றோர் விவசாயத்திற்காக வீட்டிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பமொன்றில் சந்தேகநபரால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சிறுமி சற்று உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.