மனிதத்தை மலர வைப்போம்.

மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் ; மதித்து நடத்தல் வேண்டும்....!

நாம் தெரிந்தோ, தெரியாமலோ சில கருத்துக்களை நம் மனதில் பதிய வைத்துக் கொள்கிறோம்...

நட்புறவை வளர்க்கும் சில கருத்துக்களை ஏற்று வருகிறோம். அத்தோடு சில வெறுப்புணர்ச்சியூட்டும் கருத்துக்களையும் நாம் பதிவு செய்து கொண்டு வருகிறோம்...

மொத்தத்தில் பார்த்தால் உலகில் நட்புணர்ச்சியை விட, வெறுப்புணர்ச்சி தான் அதிகமாகக் காணப்படுகிறது...

இன்றைய நாளில் சமயப்பற்று காரணமாக, சாதிப் பற்று காரணமாக, வெறுப்புணர்ச்சியே வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்...!

இந்த வெறுப்புணர்ச்சி பெரிதும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே எழக் காண்கிறோம். எந்த மனிதனைப் பற்றியும் ஆலோசிக்காமல் தன் நலம் தாங்கி இருப்பவர்களை நாம் எதில் கொண்டு சேர்ப்பது...?

குறிப்பாக இந்த எண்ணம் படிக்காத பாமர மக்களைக் காட்டிலும், படித்தவர்களிடத்தில் தான் அதிகமாக இருக்கிறது, நல்ல மனிதர்கள் என்றால் நிகரான மனிதனையும் மதித்து நடக்க வேண்டும்...

அவர்களின் நடத்தை தான் மற்ற மனிதனை அன்புடன் வாழ வகை செய்யும். ஆனால்!, யார் இப்படி இன்று நடந்து கொள்கின்றார்கள்...?

எவரும் மற்றவர்களை மதித்து நடக்கக் கூட ஒரு நிமிடம் ஆலோசிக்கத் தான் செய்கிறார்கள். மனிதனே மனிதனை மதிக்காத போது தான் மனிதனின் மனம் வாழ்க்கையை வெறுத்து வெறுமையாகி விடுகிறது.

ஒருவர் செய்கிற செயலோ, பேசுகிற பேச்சோ, நமக்குப் பிடிக்காத காரணத்தால் கோபம் எழும் போதே அது மூளையிலுள்ள சிற்றறைகளைத் தாக்கி வெறுப்பு உணர்ச்சியைப் பதிவு செய்து விடுகிறது.

சகிப்புத் தன்மை உடையவராக, சினத்தைக் குறைத்து, கண்ணியத்தை கடைபிடிப்பவராக, மனித நேயராக புதிய உலகத்தை நோக்கி நகர்த்த ஆரம்பித்தோம் என்றால் நற்குணங்களின் சுவையை உணரத் துவங்குவோம்...

ஆம் நண்பர்களே..!

காலம் கடந்தாலும் தாழ்வில்லை, நமக்கு நாமே குருவாக, நண்பனாக இருந்து தன்னறிவோடு ஒரு புதிய வாழ்வை உணர்வோம்...!

நிகரான மனிதர்களை மதித்து மனிதனாக வாழ்வது எப்படி...? என்பதைக் கற்றுக் கொள்வோம்....

மனிதனை மதிப்போம். உலகில்  மனிதத்தை மலர வைப்போம்...

உடுமலை சு. தண்டபாணி✒️

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.